
Vijay Hazare Trophy: Tamil Nadu bowled out Karnataka by 122 (Image Source: Google)
விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் தொடரில் இன்று இரண்டாவது சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் எலைட் குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு - கர்நாடகா அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற கர்நாடக அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர் ரவிக்குமர் சமர்த் ரன் ஏதுமின்றி ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அதன்பின் ஜோடி சேர்ந்த ரோஹன் கதம் - கேப்டன் மனீஷ் பாண்டே இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.