Advertisement

விஜய் ஹசாரே கோப்பை: ரன் வேட்டையை தொடரும் ருதுராஜ்; மகாராஷ்டிரா அபார வெற்றி!

சத்தீஸ்கர் அணிக்கெதிரான விஜய் ஹசாரே ஒருநாள் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் மகாராஷ்டிரா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Advertisement
Vijay Hazare Trophy: Ton-up Gaikwad stars in Maharashtra's high-scoring successful chase
Vijay Hazare Trophy: Ton-up Gaikwad stars in Maharashtra's high-scoring successful chase (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Dec 09, 2021 • 06:07 PM

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றுப் போட்டியில் எலைட் குரூப் டி பிரிவில் இடம்பிடித்துள்ள மகாராஷ்டிரா - சத்திஸ்கர் அணிகள் மோதின. 

Bharathi Kannan
By Bharathi Kannan
December 09, 2021 • 06:07 PM

இப்போட்டியில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய சத்தீஸ்கர் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Trending

அதன்பின் ஜோடி சேர்ந்த அமந்தீப் கரே - ஷஷாங் சிங் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினார். 

இதனால் 50 ஓவர்கள் முடிவில் சத்தீஸ்கர் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்களைச் சேர்த்தது. மகாராஷ்டிரா அணி தரப்பில் முகேஷ் சௌத்ரி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து இலக்கைத் துரத்திய மகாராஷ்டிரா அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் - யாஷ் நாகர் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தது. இதில் யாஷ் நாகர் 52 ரன்னில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ருதுராஜ் கெய்க்வாட் சதமடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார்.

இந்த சீசனில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கெய்க்வாட் 154 ரன்களைக் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். 

இதன்மூலம் மகாராஷ்டிரா அணி 47 ஓவர்களில் இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் சத்தீஸ்கர் அணியை வீழ்த்தியது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement