Advertisement
Advertisement
Advertisement

பாகிஸ்தான் வீரருக்கு ஜெர்சியை பரிசளித்த விராட் கோலி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி, தனது ஜெர்சியில் ஆட்டோகிராப் போட்டு, அதனை பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் ஹரிஸ் ராவுஃப்-க்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார். 

Advertisement
Virat Kohli gifts signed India jersey to Pak pacer Haris Rauf after Asia Cup match, wins hearts
Virat Kohli gifts signed India jersey to Pak pacer Haris Rauf after Asia Cup match, wins hearts (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 29, 2022 • 10:11 PM

நடப்பு ஆசிய கோப்பையின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடின. இந்தப் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
August 29, 2022 • 10:11 PM

மேலும் இது கோலிக்கு 100ஆவது சர்வதேச டி20 போட்டியாகும். இந்தப் போட்டியில் அவர் 35 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தது அவரது இன்னிங்ஸ். 

Trending

இந்நிலையில், ஆட்டம் முடிந்ததும் அவரது இந்திய ஜெர்ஸியில் அவரின் ஆட்டோகிராப்பை போட்டு, அதனை பாகிஸ்தான் பந்து வீச்சாளர் ஹரிஸ் ராவுஃப் இடம் கொடுத்துள்ளார் விராட் கோலி. அவரும் அதனை மகிழ்ச்சியுடன் பெற்று செல்கிறார். 

இக்காணொளியை பிசிசிஐ பகிர்ந்துள்ளது. இதற்கு முன்னர் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்சியையும் ஹாரிஸ் ராவூஃப் அன்பளிப்பாக பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிசிசிஐயின் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement