பாபர் அசாம் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் - விராட் கோலி!
2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில், மான்செஸ்டரில் நடந்த ஆட்டத்திற்குப் பிறகு நான் பாபருடன் நல்ல தொடர்பில் உள்ளேன் என்று இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பைத் தொடர் இம்மாதம் ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் வரும் செப்டம்பர் 2ஆம் தேதி மோத உள்ளது. இந்த நிலையில் உலககோப்பை தொடருக்கு முன்பு ஆசிய கோப்பை நடைபெறுவதால் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இது கருதப்படுகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரராக பாபர் அசாம் உள்ளார். ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 ஆகிய மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் முதல் 5 இடங்களுக்குள் பாபர் அசாம் உள்ளார். இந்நிலையில் , பாபர் அசாம் "உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்" என்று விராட் கோலி கூறியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்று பாராட்டியுள்ளார்.
Trending
பாபர் அசாமுடனான சந்திப்பு குறித்து விராட் கோலி கூறுகையில், “உலகின் சிறந்த பேட்டர்களில் ஒருவராக பாபர் அசாம் உள்ளார். 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில், மான்செஸ்டரில் நடந்த ஆட்டத்திற்குப் பிறகு நான் பாபருடன் நல்ல தொடர்பில் உள்ளேன். மேலும் நாங்கள் இருவரும் கிரிக்கெட்டை பற்றி பேசினோம். முதல் நாளிலிருந்தே நான் அவரிடமிருந்து நிறைய மரியாதையை பார்த்தேன். அது மாறவில்லை. உண்மை எதுவாக இருந்தாலும், அவர் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கலாம். அவர் விளையாடுவதை நான் எப்பொழுதும் பார்த்து மகிழ்வேன்” என்று கூறியுள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now