Advertisement
Advertisement
Advertisement

விராட் கோலியை குறைத்து மதிப்பிடாதீர்கள் - பாகிஸ்தானை எச்சரிக்கும் சல்மான் பட்!

ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதவுள்ள நிலையில், விராட் கோல பாகிஸ்தானை அச்சுறுத்துவார் என அந்த அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட் சுட்டிக்காட்டியுள்ளார். 

Bharathi Kannan
By Bharathi Kannan August 14, 2022 • 22:05 PM
'Virat Kohli will surely trouble Pakistan': Salman Butt warns Babar & Co
'Virat Kohli will surely trouble Pakistan': Salman Butt warns Babar & Co (Image Source: Google)
Advertisement

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. ஆகஸ்ட் 28ஆம் தேதி கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்கிறது. இந்த ஆசிய கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் 3 முறை மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி. அதே நம்பிக்கையுடன் பாகிஸ்தான் அணி இந்தியாவை எதிர்கொள்ளவுள்ள நிலையில், அந்த படுதோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் களமிறங்குகிறது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.

Trending


ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் ராகுல் டிராவிட்டின் வழிகாட்டுதலில், அனுபவமும் இளமையும் கலந்த கலவையான நல்ல பேலன்ஸான வலுவான அணியாக இந்தியா இம்முறை களமிறங்குகிறது. 

இந்திய அணியின் நட்சத்திர வீரரும் மேட்ச் வின்னருமான விராட் கோலி ஃபார்மில் இல்லாதது மட்டுமே இந்திய அணிக்கு ஒரே பிரச்னை. ஆனால் கோலி ஸ்கோர் செய்யாவிட்டாலும், அதை ஈடுகட்டும் அளவிற்கான பேட்டிங் ஆர்டர் இந்திய அணியில் உள்ளது. ஆனால் கோலி நன்றாக ஆடினால் அந்த போட்டி வேற லெவலில் இருக்கும். கோலி ஸ்கோர் செய்தால் இந்தியா ஜெயித்துவிடும். எனவே ஃபார்மில் இல்லாத கோலி ஃபார்முக்கு வருவது இந்தியாவிற்கு முக்கியம்.

இந்நிலையில், கோலி ஃபார்மில் இல்லையென்றாலும், அவரை காட்டி பாகிஸ்தானை எச்சரித்துள்ளார் சல்மான் பட். இதுகுறித்து பேசிய சல்மான் பட், “விராட்கோலி அனுபவமும், திறமையும் நிறைந்த வீரர். அவர் எப்போது ஃபார்முக்கு வருவார் என்று இந்திய அணி எதிர்நோக்கி காத்துக்கொண்டிருக்கிறது. ஃபார்மில் இல்லாத ஏகப்பட்ட வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக ஃபார்முக்கு வந்ததை நாம் பார்த்திருக்கிறோம். எனவே கோலி ஃபார்முக்கு வந்துவிட்டால் அது பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்னையாக அமைந்துவிடும்” என்று எச்சரித்துள்ளார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement