
Virat leads cricketing fraternity in paying rich tributes to Lata Mangeshkar (Image Source: Google)
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர் கடந்த ஜனவரி 8ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் உடல் உறுப்புகள் செயலிழப்பு காரணமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை காலமானார்.
காலை 8 மணியளவில் உயிர் பிரிந்த நிலையில், அவரது உடல் தற்போது மருத்துவமனையிலிருந்து மும்பையிலுள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு பிற்பகல் 3.30 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிகிறது.
இதைத் தொடர்ந்து, மாலை 6.30 மணிக்கு முழு அரசு மரியாதையுடன் சிவாஜி பூங்காவில் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்படுகிறது. சிவாஜி பூங்காவில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.