
Virender Sehwag Says Manish Pandey May Not Get A Chance For India Again (Image Source: Google)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் முடிந்துள்ள நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று தொடங்க இருக்கிறது.
இந்த தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை மிகச்சரியாகப் பயன்படுத்தி அசத்தியுள்ளனர். அதிலும் இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ், ராகுல் சஹார் ஆகியோர் சிறப்பாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இத்தொடரில் மோசமாக விளையாடிய இந்திய அணியின் முன்னணி வீரரான மனிஷ் பாண்டே குறித்து சேவாக் தனது காட்டமான கருத்தினைத் தெரிவித்துள்ளார்.