BAN vs IRE, 1st ODI: சதத்தை தவறவிட்ட ஷாகிப், ஹிரிடோய்; அயர்லாந்துக்கு கடின இலக்கு!
அயர்லாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 339 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்து அணி 3 போட்டிகள் கொண்ட, 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டில் சில்ஹாட்டில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியில் கேப்டன் தமிம் இக்பால் 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த லிட்டன் தாஸ் - நஜ்முல் ஹொசைன் சாண்டோ இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதன்பின் லிட்டன் தாஸ் 26 ரன்களிலும், நஜ்முல் ஹுசைன் 25 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.
Trending
பின்னர் ஜோடி சேர்ந்த ஷாகிப் அல் ஹசன் - தவ்ஹித் ஹிரிடோய் இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன், 150 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைந்து அசத்தினர்.
அதன்பின் இருவரும் சதமடிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷாகிப் அல் ஹசன் 93 ரன்களிலும், தவ்ஹித் ஹிரிடோய் 92 ரன்களிலும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டனர். இதையடுத்து வந்த முஷ்பிக்கூர் ரஹிமும் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிடார்.
பின்னர் வந்த வீரர்களாலும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறினர். இதன்மூல 50 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 8 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்களைச் சேர்த்தது. அயர்லாந்து தரப்பில் கிரஹாம் ஹியூம் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
Win Big, Make Your Cricket Tales Now