
VVS Laxman Leaves Out Veteran Batsman As He Picks His First Test-playing XI (Image Source: Google)
நியூசிலாந்துக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-0 என இந்திய அணி வென்றது. அடுத்ததாக இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு சென்று 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி செஞ்சூரியனில் தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணி குறித்து பேசியுள்ள விவிஎஸ் லக்ஷ்மண், இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனை தேர்வு செய்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள லக்ஷ்மண், “நன்றாக ஆடும் வீரர்களுக்கு தொடர் வாய்ப்பளிப்பது அவசியம். அணி தேர்வில் தொடர்ச்சி மிக முக்கியம். அந்தவகையில் நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக ஆடிய மயன்க் அகர்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரையும் கண்டிப்பாக ஆடவைக்க வேண்டும்.