
VVS Laxman Will Head National Cricket Academy: Sources (Image Source: Google)
இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலகக் கோப்பையுடன் முடிவடைந்தது. அவர் உடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ நீட்டிக்கவில்லை.
இதையடுத்து இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்குப் பலரது பெயர்கள் அடிப்பட்டு வந்த நிலையில், கடைசியாக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார். நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து அவர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்கவுள்ளார்.
பிசிசிஐ விதிகளின்படி ஒரே நபர் இரண்டு பதவிகளில் இருக்கக் கூடாது என்பதால், ராகுல் டிராவிட் வகித்து வந்த தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் பதவிக்கு புதிய நபரை நியமிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே தேசிய கிரிக்கெட் அகாடமியின் புதிய இயக்குநராக விவிஎஸ் லட்சுமண் நியமிக்கப்படலாம் எனக் கடந்த சில வாரங்களுக்கு முன்னரே செய்திகள் வெளியானது.