
Wade 'Excited To Go Back Into Middle Order' During Bangladesh Series (Image Source: Google)
ஆஸ்திரேலியா - வங்கதேச அணிகளுக்கு இடையேயான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் இன்று முதல் தாக்காவில் நடைபெறுகிறது.
மேலும் இத்தொடரின் ஆஸ்திரேலிய அணிக்கான கேப்டனாக மேத்யூ வேட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இத்தொடரின் போது மீண்டும் மிடில் ஆர்டரில் களமிறங்கி விளையாடுவது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மேத்யூ வேட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,“வங்கதேச அணியுடனான தொடரின் போது மீண்டும் மிடில் ஆர்டரில் களமிறங்குவது எனக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கும் சூழலில் அதில் நான் தொடக்க வீரராக களமிறங்குவதா அல்லது மிடில் ஆர்டரில் களமிறங்குவேனே என்பது எனக்கு சரியாக தெரிவில்லை.