
Wahab Riaz, Samit Patel takes Trent Rockets to the top (Image Source: Google)
தி ஹண்ரட் தொடரில் நேற்று நடைபெற்ற 20ஆவது லீக் ஆட்டத்தில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் - வெல்ஷ் ஃபையர் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ராக்கெட்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய வெல்ஷ் அணி கிளென் பிலிப்ஸிஸ் அதிரடியான ஆட்டத்தால், 100 பந்துகளில் 8 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 50 ரன்களைச் சேர்த்தார். ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி தரப்பில் வஹாப் ரியாஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதன்பின் இலக்கை நோக்கி களமிறங்கிய ட்ரெண்ட் ராக்கெட்ஸ் தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், ஸ்மித் பட்டேலின் சிறப்பான ஆட்டத்தினால் 10 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே இலக்கை எட்டியது.