
Wanindu Hasaranga Becomes Fourth Sri Lankan Bowler To Take A T20I Hattrick (Image Source: Google)
டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா -இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இலங்கை அணி 142 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் செய்தது.
இப்போட்டியின் 15ஆவது ஓவரை இலங்கை அணியின் வனிந்து ஹசரங்கா வீசினார். ஹசரங்கா வீசிய அந்த ஓவரின் கடைசி பந்தில், மார்க்ரம் போல்டாகி வெளியேறினார்.
அதன்பின், ஹசரங்கா 18ஆவது ஓவரை வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து களமிறங்கிய பிரிட்டோரியஸ் அடுத்த பந்திலேயே டக்-அவுட்டாகி வெளியேறினார். இதன்மூலம் ஹசரங்கா ஹாட்ரிக் (3) விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.