
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடமும், 2ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்திடமும் தோல்வி அடைந்தது. ஆனால், ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து அணிகளை அபாரமாக வீழ்த்தி தற்போது 4 புள்ளிகளுடன் ரன் ரேட்டில் 2ஆவது இடத்தில் இந்திய அணி இருக்கிறது.
இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கருகிவிடவில்லை. ஆப்கானிஸ்தான், நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே நாளை நடக்கும் ஆட்டத்தில் ஆஃப்கானிஸ்தான் வென்றுவிட்டால், நமிபியா அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி நல்ல ரன் ரேட்டில் வெல்லும் பட்சத்தில் அரையிறுதிக்குச் செல்ல முடியும். ஒருவேளை ஆப்கானிஸ்தானை நியூஸிலாந்து அணி வென்றுவிட்டால், இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு கருகிவிடும்.
இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஷோயப் அக்தர் தனது யூடியூப் சேனலில் இந்திய அணியின் தோல்வி குறித்துப் பேசியுள்ளார்.