Advertisement

சயீத் முஷ்டாக் அலி: வாஷிங்டன் சுந்தர் விலகல்!

காயம் காரணமாக சயீத் முஷ்டாக் அலி கோப்பை தொடரிலிருந்து தமிழ்நாடு ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் விலகினார்.

Advertisement
Washington Sundar has been ruled out of the Syed Mushtaq Ali
Washington Sundar has been ruled out of the Syed Mushtaq Ali (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 21, 2021 • 03:31 PM

இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர்களில் ஒருவர் வாஷிங்டன் சுந்தர். இவர் இங்கிலாந்தில் இருந்தபோது கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2021 போட்டியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகினார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் பங்கேற்காமல் நாடு திரும்பினார். 

Bharathi Kannan
By Bharathi Kannan
October 21, 2021 • 03:31 PM

இதன்பிறகு சயீத் முஷ்டாக் அலி கோப்பை தொடருக்கான தமிழக அணியில் வாஷிங்டன் சுந்தரின் பெயர் இடம்பெற்றிருந்தது. காயத்திலிருந்து அவர் குணமடைந்துவிட்டதாகக் கூறப்பட்டது. மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு ஐபிஎல் 2021 போட்டியின் 2ஆம் பகுதியில் விளையாடாத நடராஜனும் தமிழக அணியில் இடம்பெற்றிருந்தார். 

Trending

இந்நிலையில் காயத்திலிருந்து முழுமையாகக் குணமாகாததால் சயீத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியிலிருந்து வாஷிங்டன் சுந்தர் விலகியுள்ளார். பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் வாஷிங்டன் சுந்தரின் உடற்தகுதி சோதனை செய்யப்பட்டது. 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

அதில் மேலும் நான்கு வாரங்கள் ஓய்வெடுத்தால் மட்டுமே காயத்திலிருந்து குணமடைய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் இத்தொடரிலிருந்து தற்போது விலகியுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement