
Wasim Akram not happy with the decisions taken by PCB Chairman Ramiz Raja (Image Source: Google)
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா அண்மையில் பதவியேற்றார். ரமீஸ் ராஜா பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராவது உறுதியானதுமே, பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள் பொறுப்பிலிருந்து மிஸ்பா உல் ஹக் மற்றும் வக்கார் யூனிஸ் விலகினர் .
கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து பயிற்சியாளர்களாக இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்துவந்த தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும், டி20 உலக கோப்பை நெருங்கிய நிலையில், திடீரென ராஜினாமா செய்தனர்.
இது பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜாவின் செயல்பாட்டின் மீது கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார் வாசிம் அக்ரம்.