
பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வாசிம் அக்ரம். வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான வாசிம் அக்ரம், பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்துள்ளார். 2003 உலக கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற வாசிம் அக்ரம், பயிற்சியாளருக்கான அனைத்து தகுதிகளையும் பெற்றிருந்தும் அவர் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக விரும்பவில்லை.
ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடிய வாசிம் அக்ரம், பிற்காலத்தில் அந்த அணியின் பவுலிங் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் ஆலோசகராகவும் இருந்துள்ளார். ஆனாலும் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் ஆக அக்ரம் விரும்பவில்லை.
பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர்கள் பொறுப்பிலிருந்து மிஸ்பா உல் ஹக்கும் வக்கார் யூனிஸும் விலகினர். இதையடுத்து புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் அணி படுமோசமான நிலையில் உள்ளது. கீழே கிடக்கும் பாகிஸ்தான் அணியை வலுவான அணியாக உருவாக்க வேண்டிய கட்டாயமிருக்கும் நிலையில், அதற்கு தகுதியான வாசிம் அக்ரம், அதைப்பற்றி நினைத்துக்கூட பார்க்கவில்லை.