ஒருநாள் கிரிக்கெட் அழிவை நோக்கி செல்கிறது - வாசிம் அக்ரம் தாக்கு!
ரசிகர்களை மகிழ்விக்க டி20 போட்டிகளையும் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளையும் வழக்கம் போல நடத்தலாம் ஆனால் மவுசு குறையத் தொடங்கியுள்ள ஒருநாள் கிரிக்கெட்டின் இருதரப்பு தொடர்களை நிறுத்தி விடலாம் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
பிரபல இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஸ்டோக்ஸ், ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதையடுத்து மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளில் எதற்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும், போட்டி அட்டவணை எப்படி அமையவேண்டும் என்கிற விவாதம் உருவாகியுள்ளது.
இந்நிலையில் ரசிகர்களை மகிழ்விக்க டி20 போட்டிகளையும் கிரிக்கெட்டின் உயிர்நாடியான டெஸ்ட் போட்டிகளையும் வழக்கம் போல நடத்தலாம் ஆனால் மவுசு குறையத் தொடங்கியுள்ள ஒருநாள் கிரிக்கெட்டின் இருதரப்பு தொடர்களை நிறுத்தி விடலாம் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
Trending
இதுகுறித்து பேசிய அவர், “ஒரு வர்ணனையாளராக டி20 போட்டிகள் வந்தபின் ஒருநாள் போட்டிகள் ஒரு இழுபறியாக எனக்கு தோன்றுகிறது. அப்படியானால் வீரர்களின் இடத்திலிருந்து கற்பனை செய்தால் 50 – 50 ஓவர்கள் போட்டி துவங்குவதற்கு முந்தைய ஆட்டம், மதிய உணவு ஆட்டம், பிந்தைய ஆட்டம் என 3 வகைகளில் விளையாட வேண்டியுள்ளது.
மறுபுறம் 4 மணி நேரங்களில் முடிந்துவிடும் டி20 போட்டிகள் மிகவும் எளிதானது. மேலும் உலகம் முழுவதிலும் டி20 தொடர்கள் நடைபெறுவதால் பணமும் அதிகமாக கிடைக்கிறது. இதை நவீன கிரிக்கெட்டின் ஒரு அங்கமாக நான் பார்க்கிறேன். டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டை தவிர்த்து ஒருநாள் கிரிக்கெட் அழியும் நிலையில் உள்ளது. அதில் விளையாடுவது வீரர்களுக்கும் சோர்வை ஏற்படுத்துகிறது. ஒருநாள் முழுக்க நடைபெறுவதால் இப்போதெல்லாம் வீரர்கள் டி20 போட்டிகளில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டை மதிக்கிறார்கள். இந்த வகையான கிரிக்கெட்டில் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு பெற்றுள்ளது சோகமானது என்றாலும் அவரின் முடிவை ஏற்றுக் கொள்கிறேன்.
ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 10 ஓவர்களுக்குப் பின் பந்துக்கு ஏற்ற ரன்களை அடித்து 40 ஓவர்களில் 200, 220 ரன்களை எடுத்து கடைசி 10 ஓவரில் 100 ரன்கள் அடிப்பது சுவாரசியமற்ற தொழிற்சாலை நிகழ்வாகியுள்ளது. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் ஒரு வீரராக உங்களை சோதிக்கும் போட்டியாகும். எனவே பணத்திற்காக டி20 போட்டிகளில் விளையாடினாலும் வரலாற்றில் நீங்கள் சிறந்த வீரராக தெரிவதற்கு அது உதவி செய்யும்” என்று கூறினார்.
Win Big, Make Your Cricket Tales Now