
Wasim Jaffer makes perfect prediction about IPL 2021 final that's bound to come true (Image Source: Google)
ஐபிஎல் 14வது சீசனின் இறுதிப் போட்டியில் ஏற்கனவே 3 முறை கோப்பையை வென்ற சிஎஸ்கேவும், 2 முறை கோப்பையை வென்றுள்ள கேகேஆரும் மோதுகின்றன. துபாயில் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் இரு அணிகளும் விளையாடுகின்றன.
இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெற்று கோப்பையை வெல்லும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில், இதுகுறித்து டுவீட் செய்த முன்னாள் கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளருமான வாசிம் ஜாஃபர், “உலக கோப்பை வின்னிங் கேப்டன் மற்றும் நியூசிலாந்து பயிற்சியாளரை பெற்றிருக்கும் அணி தான் கோப்பையை வெல்லும்” என்று கூறியுள்ளார்.