
Wasim Jaffer Picks India's Playing XI For 2nd Test Against New Zealand, Keeps Rahane But Removes Thi (Image Source: Google)
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் நியூசிலாந்து அணி தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் கான்பூரில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி முடிவில்லாமல் டிராவில் முடிந்தது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ஆம் தேதி மும்பையில் தொடங்கவுள்ளது.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. மேலும் இப்போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி மீண்டும் இணைகிறார். இதனால் அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.