SA vs IND, 1st ODI: தனது பிளேயிங் லெவனை அறிவித்த வாசிம் ஜாஃபர்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ளார்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. ஆனால் வீரர்கள் அதை தவற விட்டுவிட்டனர். முதல் டெஸ்டில் வெற்றிபெற்ற இந்திய அணி அதற்கு அடுத்த 2 டெஸ்டில் தோல்வியை தழுவி ஏமாற்றத்தை அளித்தது.
இந்நிலையில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரின் முதல் ஆட்டம் நாளை (19ஆம் தேதி) நடக்கிறது.
டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி ஒருநாள் தொடரை கைப்பற்றுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அந்தவரிசையில் நாளை இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் கருத்து தெரிவித்துள்ளார்.
வாசிம் ஜாஃபர் தேர்வு செய்துள்ள இந்திய அணியில் இளம் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், வெங்கடேஷ் ஐயர் ஆகியோருக்கு இடமில்லை.
அதேசமயம் கம்பேக் கொடுக்கும் ஷிகர் தவான், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் அவரது பிளெயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர்.
வாசிம் ஜாஃபரின் பிளேயிங் லெவன் - கேஎல் ராகுல் (கே), ஷிகர் தவான், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாக்கூர், அஸ்வின், புவனேஷ்வர் குமார்/ முகமது சிராஜ், யுஸ்வேந்திர சஹால், ஜஸ்ப்ரித் புமாரா.
Win Big, Make Your Cricket Tales Now