பவுண்டரியே இல்லாமல் 5 ரன்கள்; ஃபீல்டரின் செயலால் நழுவிய வெற்றி - காணொளி!
கடைசிப் பந்தில் வெற்றி பெற 5 ரன்கள் தேவை. பேட்டர் ஒரு பவுண்டரியும் அடிக்காமலும் ஃபீல்டர் அழகான ரன் அவுட் வாய்ப்பை வீணடித்ததுடன் முட்டாள்தனமாகச் செயல்பட்டதால் பேட்டர்கள் 5 ரன்களை ஓடியே எடுத்துவிட்டார்கள்.

அல் வக்கீல் கிரிக்கெட் லீக் போட்டியில் ஆடியோனிக் - ஆட்டோமால் அணிகள் மோதின. அப்போது ஆட்டத்தின் கடைசிப் பகுதியில் ஆட்டோமால் அணி வெற்றி பெற கடைசிப் பந்தில் வெற்றி பெற 5 ரன்கள் தேவைப்பட்டன.
ஆட்டோமால் பேட்டர் சிக்ஸர் அடிக்க முயல, பந்து அவ்வளவு தூரமெல்லாம் செல்லவில்லை. லாங் ஆஃப் பக்கம் சென்றது. அதை ஆடியோனிக் ஃபீல்டர் தடுத்தார். அப்படியே த்ரோ வீசியிருந்தால் வெற்றி கை மேல் வந்து விழுந்திருக்கும். ஆனால் ரன் அவுட் செய்வதற்காக லாங் ஆஃப் பக்கமிருந்து பந்துடன் ஓடி வந்து நடுவர் பக்கமிருந்த ஸ்டம்புகளை வீழ்த்தினார் அந்த ஃபீல்டர்.
அப்போது ஒரு பேட்டர் கிரிஸுக்குள்ளேயே தான் இருந்தார். இதனால் இன்னொரு பேட்டரை ரன் அவுட் செய்ய முயன்றார் ஃபீல்டர். எதற்கு இப்படிச் செய்தார் என்றுதான் புரியவில்லை. அப்படியே விட்டிருந்தாலும் எதிரணியால் ஒரு ரன் தான் எடுத்திருக்க முடியும். ஆனால் முட்டாள்தனமானச் செயல்பட்டு பேட்டரை ரன் அவுட் செய்வதற்காக விக்கெட் கீப்பர் பக்கம் ஓடோடிச் சென்றார்.
இதைப் பார்த்த மறுமுனையிலிருந்த பேட்டர், இன்னொரு ரன் எடுக்க முயன்றார். இதனால் பதற்றத்துடன் விக்கெட் கீப்பர் பக்கமிருந்த ஸ்டம்புகளைப் பந்தால் அடிக்க முயன்றார் ஃபீல்டர். அவருடைய துரதிர்ஷ்டம், பந்து ஸ்டம்பில் படாமல் விக்கெட் கீப்பரின் பின்னால் உருண்டோடியது. உடனே இன்னொரு ஃபீல்டர் பந்தைத் துரத்திச் சென்று அதைப் பிறகு எடுத்து விக்கெட் கீப்பரிடம் த்ரோ வீசினார்.
How to score 5 runs off the last ball to win without hitting a boundary… @ThatsSoVillage pic.twitter.com/0nIyl5xbxi
— The ACC (@TheACCnz) February 1, 2022
இத்தனையும் நடந்து முடிவதற்குள் பேட்டர்கள் வெற்றிக்குத் தேவையான 5 ரன்களை ஓடியே எடுத்துவிட்டார்கள். இதுகுறித்த காணொளிகள் தற்போது இணையாத்தில் வைரலாகி வருகின்றன.
Win Big, Make Your Cricket Tales Now