
WATCH: 6 Needed Off The Last Ball & Trent Boult Smashes It For A Six! (Image Source: Google)
நியூசிலாந்தின் உள்ளூர் டி20 தொடரான சூப்பர் ஸ்மேஷ் லீக் ஆட்டத்தில் இன்று நடைபெற்ற 11ஆவது போட்டியில் நார்த்தன் நைட்ஸ் -கேன்டர்பரி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நார்த்தன் நைட்ஸ் அணி பந்துவீச தீர்மானிதது.
அதன்படி களமிறங்கிய கேண்டர்பரி அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் ஹென்றி நிக்கோலஸ் மட்டும் நிலைத்து விளையாடி 35 ரன்களைச் சேர்த்தார்.
இதனால் 17.2 ஓவர்களில் கேண்டர்பரி அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ரன்களை மட்டுமே சேர்த்தது. நார்த்தன் நைட்ஸ் அணி தரப்பில் ஜோ வால்கர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.