
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மிட்செல் மர்ஷ் ரன்கள் ஏதுமின்றியும், ஐடன் மார்க்ரம் 22 ரன்னிலும், ரிஷப் பந்த் 2 ரன்னிலும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். பின்னர் இணைந்த நிக்கோலஸ் பூரன் - ஆயூஷ் பதோனி இணை சிறப்பா ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன், இருவரும் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
பின் 44 ரன்களில் நிக்கோலஸ் பூரன் விக்கெட்டை இழக்க, ஆயூஷ் பதோனி 41 ரன்களுக்கும், இறுதியில் அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர் 19 மற்றும் அப்துல் சமத் 27 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.