Advertisement
Advertisement
Advertisement

அசத்தலான கேட்ச் பிடித்து அசத்திய ஐடன் மார்க்ரம்; வைரல் காணொளி!  

கேகேஆர் அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவை ஹைதராபாத் அணியின் கேப்டன் ஐடன் மார்க்ரம் மிரட்டலான கேட்ச் பிடித்து வெளியேற்றியுள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 04, 2023 • 22:47 PM
 Watch Aiden Markram Pulls Off Stunning Catch Off His Own Bowling To Dismiss Nitish Rana
Watch Aiden Markram Pulls Off Stunning Catch Off His Own Bowling To Dismiss Nitish Rana (Image Source: Google)
Advertisement

16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 47ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ் ராணா பேட்டிங்கை தேர்வு செய்தார். 

இதையடுத்து களமிறங்கிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் ரஹ்மனுல்லா குர்பாஸ் இணை களமிறங்கியனர். இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் ரன்கள் ஏதுமின்றியும், அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் 7 ரன்களிலும் என அடுத்தடுத்து மார்கோ ஜான்சனின் முதல் ஓவரிலேயே விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

Trending


அதன்பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜேசன் ராயும் 20 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் நிதிஷ் ரானா - ரிங்கு சிங் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன், அணியின் ஸ்கோரையும் சீரான வேகத்தில் உயர்த்தினர்.  

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ் ரனா 42 ரன்களை எடுத்த நிலையில், 12ஆவது ஓவரை வீசிய மார்க்ரம் பந்துவீச்சை அட்டாக் செய்ய நினைத்து சிக்சர் அடிக்க முயன்றார். ஆனால் அது டாப் எட்ஜாக பந்துவீசிக் கொண்டிருந்த எய்டன் மார்க்ரம், லாங் ஆன் திசை வரை வேகமாக ஓடி சென்று டைவ் அடித்து கேட்ச்சை பிடித்தார். இது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நடப்பு சீசனிலேயே மிகச்சிறந்த கேட்ச் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 

 

இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் கேகேஆர் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது. இந்நிலையில் ஐடன் மார்க்ரம் பிடித்த அசத்தலான கேட்ச் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement