
ஐபிஎல் தொடரின் 14ஆவது லீக் போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதி வருகின்றன. புனே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணிக்கு ஓப்பனிங்கே அதிர்ச்சி தந்தார் உமேஷ் யாதவ். அவர் வீசிய 3ஆவது ஓவரிலேயே ரோகித் சர்மா 3 ரன்களுக்கு கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதன் பின்னர் தான் பெரும் ட்விஸ்ட் இருந்தது. யாரும் எதிர்பார்க்காத வகையில் தென்னாப்பிரிக்க வீரர் டேவால்ட் பிரேவிஸ் முதல் விக்கெட்டிற்கு களமிறங்கினார்.
தென் ஆப்பிரிக்காவின் அண்டர் 19 வீரரான டேவால்ட் பிரேவிஸ், இன்னும் சர்வதேச போட்டியில் கூட அறிமுகமாகவில்லை. ஆனால் முதல் விக்கெட்டிற்கு வந்துவிட்டார் என எதிரணி சாதாரணமாக நினைத்துவிட்டனர். இதனால் அவருக்கு எதிராக புதுமுக வீரர் ராஷிக் சாலமை அனுப்பி பவுலிங் வீசினார் ஸ்ரேயாஸ் ஐயர். ஆனால் ஒரே ஒரு ஷாட் மூலம் அத்தனை பேரையும் திக்குமுக்காட வைத்துவிட்டார்.