
ஆஷஸ் தொடரின் 4ஆவது டெஸ்ட், சிட்னியில் நடைபெற்று வருகிறது. இன்றைய ஆட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் 16 ரன்களில் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது 31ஆவது ஓவரை கிரீன் வீசினார். அவருடைய முதல் பந்து ஸ்டோக்ஸை போல்ட் செய்தது.
ஆனால் பந்து ஸ்டம்பில் பட்டதே தவிர பைல்ஸ் கீழே விழவில்லை. நடுவர் பால் ரீஃபில், பந்து ஸ்டோக்ஸின் காலில் பட்டது என்று நினைத்து எல்பிடபிள்யூவுக்கு அவுட் கொடுத்தார். இதை 3ஆவது நடுவரிடம் முறையீடு செய்தார் ஸ்டோக்ஸ். ரீபிளேவில் தான் பந்து ஸ்டம்பில் பட்டு பைல்ஸ் கீழே விழாமல் இருந்தது தெரிய வந்தது.
இதனால் தப்பித்த ஸ்டோக்ஸ் தொடர்ந்து விளையாடி 66 ரன்கள் எடுத்துக் கடைசியில் லயன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பந்து ஸ்டம்பில் பட்டும் பைல்ஸ் கீழே விழாத சம்பவம் கிரிக்கெட் உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற தருணங்களில் பேட்டரை அவுட்டாக்கி வெளியேற்ற வேண்டும் எனப் பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.