ஆஷஸ் 2021: வார்னருக்கு கைக்கொடுக்கும் அதிர்ஷ்டம்; விக்கெட் எடுக்க திணறும் இங்கிலாந்து!
ஆஷஸ் டெஸ்ட் தொடர் முதல் டெஸ்ட் போட்டி 2ஆம் நாளான இன்று ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 194 என்று வலுவாகச் சென்றுகொண்டிருக்கிறது.
ஆஷஸ் டெஸ்ட் தொடர் முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பனில் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இங்கிலாந்து 147 ரன்களுக்கு சுருண்டது, 2ஆம் நாளான இன்று ஆஸ்திரேலியா 1 விக்கெட் இழப்புக்கு 141 என்று வலுவாகச் சென்றுகொண்டிருக்கிறது.
உணவு இடைவேளைக்கு முன்பாக மார்கஸ் ஹாரிஸ் 3 ரன்களில் ஒல்லி ராபின்சன் பந்தை எட்ஜ் செய்து மலானிடம் ஸ்லிப்பில் கேட்ச் ஆகி வெளியேறியதோடு சரி. அதன்பின் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட லபுசாக்னே 74 ரன்னிலும், ஸ்டீவ் ஸ்மித் 12 ரன்களுடனும் ஆட்டமிழந்தனர்.
Trending
ஆனாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வரும் வார்னர் 11 பவுண்டரிகள் 2 சிக்சருடன் 95 ரன்களுடன் சதத்தை நோக்கி நகர்ந்து வருகிறார்.
வார்னருக்கு இன்று அதிர்ஷ்டம் கடுமையாகக் கைகொடுத்தது, முதலில் 17 ரன்களில் இருந்த போது பென் ஸ்டோக்சின் ஃபுல் டெலிவரியில் போல்டானார். ஆனால் கொண்டாடவில்லை, காரணம் அது ஒரு பெரிய நோ-பால், இந்தப் பந்து மட்டுமல்ல, அதற்கு முன்பாக வீசிய 3 பந்துகளுமே நோ-பால், களநடுவர் கொடுக்கவில்லை இந்தப் பந்தில் விக்கெட் விழுந்ததால் டிவி நடுவர் தலையிட்டு நாட் அவுட் என்றார்.
— Bleh (@rishabh2209420) December 9, 2021
இது போதாதென்று வார்னர் அரைசதம் நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் போது ஒல்லி ராபின்சன் பந்து ஒன்று எட்ஜ் எடுக்க கேட்ச் பிடிக்கும் உயரத்தில் வந்தும் டக் அவுட் ஆன ரோரி பர்ன்ஸ் கேட்சையும் விட்டார். இப்படி வார்னருக்கு இன்று தப்பிப்பிழைக்கும் வாய்ப்புகள் கைக்கொடுத்து உதவின.
இதனால் ஆஸ்திரேலிய அணி ரன்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. மொத்தத்தில் இப்போது வரைக்கும் இங்கிலாந்தை வாட்டி வதைக்க ஆஸ்திரேலியா தயார் என்பது போல்தான் தெரிகிறது.
Win Big, Make Your Cricket Tales Now