
Watch: Faf du Plessis sends emotional message for CSK fans after RCB buy him in IPL mega auction: 'S (Image Source: Google)
ஐபிஎல் மெகா ஏலத்தில் ஃபாப் டு பிளெஸ்ஸியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ரூ 7 கோடிக்குத் தேர்வு செய்தது. டு பிளெஸ்ஸி சென்னை சூப்பர் கிங்ஸைவிட்டு போவதைக் காட்டிலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்குப் போகிறாரே என்கிற சோகம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் இருந்தது.
இந்த நிலையில், சென்னைக்கும், ரசிகர்களுக்கும், வீரர்களுக்கும், நிர்வாகிகளுக்கும், அணி நிர்வாகத்துக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக அவர் காணொளி வெளியிட்டுள்ளார். நிறைய சிறப்பான நினைவுகளை உருவாக்கித் தந்துள்ளதால், நன்றி கூறுவதை முக்கியமாகக் கருவதாக காணொளியில் டு பிளெஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.
#SuperKingForever @faf1307 pic.twitter.com/rt3MUcOD4o
— Chennai Super Kings - Mask Pdu Whistle Pdu! (@ChennaiIPL) February 13, 2022