
WATCH: From '6,6,6,6 To W,W,W,W' Jason Holder Turns The Table Within 24 Hours (Image Source: Google)
வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து அணிகள் மோதிய 5ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி 162 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இப்போட்டியின் கடைசி ஓவரில் ஜேசன் ஹோல்டர் 4 பந்தில் 4 விக்கெட் வீழ்த்தினார்.இதனால் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 3-2 என டி20 தொடரை கைப்பற்றியது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 5 விக்கெட்டும், ஹொசைன் 4 விக்கெட்டும் கைப்பற்றினர். இந்நிலையில், டி20 போட்டிகளில் 4 பந்துகளில் 4 விக்கெட் வீழ்த்திய நான்காவது வீரர் எனும் பெருமையை ஜேசன் ஹோல்டர் பெற்றுள்ளார்.