
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பெஷ்வர் ஸால்மி மற்றும் லாகூர் காலந்தர்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பெஷ்வர் அணி 20 ஓவரில் 158 ரன்கள் அடித்தது. 159 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய லாகூர் அணியும் 20 ஓவரில் சரியாக 158 ரன்கள் அடிக்க, ஆட்டம் டை ஆனது.
இதையடுத்து சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் ஆடிய லாகூர் அணி சூப்பர் ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே அடிக்க, 6 ரன்கள் என்ற இலக்கை முதல் 2 பந்தில் அடித்து பெஷ்வர் அணி வெற்றி பெற்றுவிட்டது.
இந்த போட்டியில் பெஷ்வர் அணி முதலில் பேட்டிங் ஆடியபோது, லாகூர் அணி சார்பில் 2ஆவது ஓவரை வீசிய ஹாரிஸ் ராவுஃப், அந்த ஓவரின் 5வது பந்தில் முகமது ஹாரிஸை வீழ்த்தினார். அதே ஓவரில் 3 பந்துகளுக்கு முன்பாக ஹாரிஸ் ராவுஃபின் பந்துவீச்சில் ஹஸ்ரதுல்லா ஸஸாயின் கேட்ச்சை காம்ரான் குலாம் என்ற வீரர் தவறவிட்டார்.