
இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி ஏற்கனவே 2 வெற்றிகளை பெற்று தொடரை கைப்பற்றிய சூழலில் நேற்று 3வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
நியூசிலாந்து அணியில் டாம் லாதம் (0), வில் யங் (20), வில்லியம்சன் (31) என அடுத்தடுத்து 3 விக்கெட்கள் சரிந்த போது, ஹென்ரி நிகோல்ஸ் மற்றும் டேர்லி மிட்செல் ஆகியோர் நிதானமாக ரன்களை அடித்து பார்ட்னர்ஷிப் அமைத்தனர். நீண்ட நேரமாக தொடர்ந்த இந்த பார்ட்னர்ஷிப்பில் பெரிய அளவில் ரன்களை அடிக்கவிடவில்லை. இதற்கு காரணம் ஹென்ரி நிகோலஸின் விக்கெட் தான்.
சுழற்பந்துவீச்சாளர் ஜாக் லீச் வீசிய ஃபுல் டெலிவரி பந்தை ஸ்ட்ரைக்கில் இருந்த ஹென்ரி நிகோல்ஸ் ஸ்ட்ரைட் ட்ரைவ் ஷாட்டாக அடித்தார். அவரின் ஷாட் சிறப்பாக இருந்தது. ஆனால் பந்து நேராக நான் ஸ்ட்ரைக்கரில் இருந்த டெரில் மிட்செலை நோக்கி செல்ல, அவர் பதற்றத்தில் உடலை நகர்த்தினார். எனினும் பேட்டையும் நகர்த்த மறந்துவிட்டர் போல.