ராஜஸ்தான் அணி 14 ஆண்டுகளுக்கு பிறகு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த நிகழ்வை ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக போட்டிக்கு முன் ராயல்ஸ் வீரர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டது.
அப்போது பேசிய ஜாஸ் பட்லர், இறுதிப் போட்டியில் விளையாடுவதை நினைத்து ஆவலுடன் இருப்பதாக கூறினார். ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் பார்வையாளர்களுக்கு முன்பு விளையாடுவது குறித்து எப்படி உணர்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பட்டது. அப்போது பேசிய அவர் முதலில் கொஞ்சம் டென்ஷனாக இருந்தாலும், 3, 4 பந்துக்கு பிறகு அனைத்தும் மறந்துவிடும்.
போட்டியின் முழுவதும் கவனம் சென்றுவிடும். இதனால் அதன் பிறகு பார்வையாளர்கள் என்ன சொல்கிறார்கள், என்ன செய்கிறார்கள், மும்பை, சென்னை ரசிகர்கள் முன்பு விளையாடுகிறோமா என எல்லாம் மறந்துவிடும். இருப்பினும் இறுதிப் போட்டியை சிம்பிளாகவும், சுதந்திரமாகவும் விளையாட உள்ளோம் என்று பட்லர் கூறினார்.