Advertisement

ஸ்டம்புகளை பறக்கவிட்ட மார்க் வுட்- வைரலாகும் காணொளி!

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் விக்கெட்டுகளை கைப்பற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
ஸ்டம்புகளை பறக்கவிட்ட மார்க் வுட்- வைரலாகும் காணொளி!
ஸ்டம்புகளை பறக்கவிட்ட மார்க் வுட்- வைரலாகும் காணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 29, 2024 • 01:28 PM

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
July 29, 2024 • 01:28 PM

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 282 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அதன்பின் முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணியானது முதல் இன்னிங்ஸில் 376 ரன்களைக் குவித்தது. பின்னர் 94 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 175 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

Trending

இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு 82 ரன்கள் மட்டுமே இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு கேப்டன் பென் ஸ்டோக்ஸ் - பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பென் டக்கெட் ஒருபக்கம் நிதானம் காட்டினாலும், மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பென் ஸ்டோக்ஸை அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.

தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பென் ஸ்டோக்ஸ் 24 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்ததுடன், அணியின் வெற்றியையும் உறுதிசெய்தார். இதன்மூலம் இங்கிலாந்து அணியானது வெறும் 7.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. 

அதிலும் இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இந்நிலையில் இந்த இன்னிங்ஸின் போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் அல்ஸாரி ஜோசப்பின் விக்கெட்டை மார்க் வுட் கைப்பற்றிய காணொளியானத் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இன்னிங்ஸின் 48ஆவது ஓவரை மார்க் வுட் வீசினார். 

 

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

அந்த ஓவரின் 5 ஆவது பந்தை எதிர்கொண்ட அல்ஸாரி ஜோசப் அடிக்க முயன்று பந்தை தவறவிட்டார். இதனால் அந்த பந்து நேராக மிடில் ஸ்டம்பை தாக்கியதுடன் அதை சிறிது தூரக் தூக்கியும் எறிந்தது. இதனால் 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் அல்ஸாரி ஜோசப் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இந்நிலையில் மார்க் வுட்டின் இந்த பந்துவீச்சு குறித்தான காணொளியானது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement