Advertisement

ஃபோர்டை ரன் அவுட் செய்த ரோஸ்டன் சேஸ்; வைரலாகும் காணொளி!

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் மேத்யூ ஃபோர்ட் ரன் அவுட்டான காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 06, 2024 • 11:59 AM
ஃபோர்டை ரன் அவுட் செய்த ரோஸ்டன் சேஸ்; வைரலாகும் காணொளி!
ஃபோர்டை ரன் அவுட் செய்த ரோஸ்டன் சேஸ்; வைரலாகும் காணொளி! (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இத்தொடரில் இதுவரை நடைபெற்று முடிந்துள்ள முதலிரண்டு ஒருநால் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து வெஸ்ட் இண்டீஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கம் முதலே சீரான வேகத்தில் விக்கெட்டுகளை இழந்ததுடன், 24.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததுடன் 86 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக அலிக் அதானாஸ் 32 ரன்களைச் சேர்த்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஸேவியர் பார்ட்ல்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Trending


இதனைத்தொடர்ந்து எளிய இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கின் போது 7ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய மேத்யூ ஃபோர்ட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். குறிப்பாக பந்தை அடித்தவுடன் சிங்கிள் எடுக்க மேத்யூ ஃபோர்ட் ஓடிய நிலையில், மறுபக்கம் இருந்த ரோஸ்டன் சேஸ் பந்தை பார்த்தவாறு கிரீஸ் உள்ளேயே இருந்தார். 

 

இதனை சற்று எதிர்பார்க்காத மேத்யூ ஃபோர்ட் ரன் அவுட் முறையில் விக்கெட்டை இழந்தார். இதனைத்தொடர்ந்து பெவிலியனுக்கு திரும்புகையில் ரோஸ்டன் சேஸுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுகொண்டே மேத்யூ ஃபோர்ட் பெவிலியனுக்கு திரும்பினார். இந்நிலையில் ரோஸ்டன் சேஸ் - மேத்யூ ஃபோர்ட் இருவருக்கும் இடையேயான மோதல் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement