
WATCH: Mitchell Starc Again Gets Rory Burns Early Again; English Opener Still Clueless (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 2ஆவது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் வியாழன் முதல் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. டேவிட் வார்னர் 167 பந்துகளில் 95 ரன்கள் எடுத்து ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 89 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. லபுசாக்னே 95 ரன்களுடனும் ஸ்மித் 18 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
இதையடுட்த்து இன்று ஆட்டம் தொடர்ந்தபோது 287 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார் லபுசாக்னே. இதன்பிறகு ராபின்சன் பந்தில் 103 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.