Advertisement

பயிற்சியில் சிக்சர்களை பறக்கவிடும் எம்எஸ் தோனி!

ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி பயிற்சி பெறும் காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
பயிற்சியில் சிக்சர்களை பறக்கவிடும் எம்எஸ் தோனி!
பயிற்சியில் சிக்சர்களை பறக்கவிடும் எம்எஸ் தோனி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 14, 2024 • 09:15 PM

இன்னும் சில தினங்களில் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கும்வகையில் முதல் லீக் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
March 14, 2024 • 09:15 PM

இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த வாரம் முதலே சென்னையில் முகாமிட்டு தங்களது பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக சில தினங்களுக்கு முன்னதாக அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் இளம் வீரர்களுடன் இணைந்து தனது பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். 

Trending

இந்நிலையில் இன்றைய தினம் மகேந்திர சிங் தோனி சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தனது பயிற்சியைத் தொடங்கினார். அப்போது பந்துவீச்சாளர்கள் வீசிய ஒவ்வொரு பந்தையும் சிக்சருக்கு விளாசி அசத்தினார். அதிலும் குறிப்பாக நோ லூக்கிங் ஷாட்டில் மகேந்திர சிங் தோனி சிக்சர்களை பறக்கவிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இந்நிலையில் தோனி சிக்சர் அடித்த காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கிட்டத்திட்ட 15 சீசன்களாக வழிநடத்தி வரும் மகேந்திர சிங் தோனி இதுவரை 250 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5,082 ரன்களைக் குவித்துள்ளார். தற்போது 42 வயதை எட்டியிருக்கும் மகேந்திர சிங் தோனிக்கு இது கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் இந்த தொடரில் அவரது ஆட்டம் எவ்வாறு இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement