
WATCH: MS Dhoni's Match Winning Knock Against Desperate Mumbai Indians (Image Source: Google)
15ஆவது ஐபிஎல் தொடரின் 33ஆவது லீக் போட்டியில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
மும்பை பட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 51* ரன்களும், சூர்யகுமார் யாதவ் 32 ரன்களும் எடுத்தனர்.