Advertisement
Advertisement
Advertisement

சிக்ஸர் விளாசி வெற்றியைத் தேடிக்கொடுத்த நைம் யங்; வைரலாகும் காணொளி!

பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான சிபிஎல் லீக் போட்டியில் ராயல்ஸ் அணி வீரர் நைம் யங் சிக்ஸர் அடித்து அசத்திய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement
சிக்ஸர் விளாசி வெற்றியைத் தேடிக்கொடுத்த நைம் யங்; வைரலாகும் காணொளி!
சிக்ஸர் விளாசி வெற்றியைத் தேடிக்கொடுத்த நைம் யங்; வைரலாகும் காணொளி! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 07, 2024 • 12:28 PM

கரீபியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் போட்டியில் செயின்ட் கிட்ஸ் & நேவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் பார்படாஸ் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த பேட்ரியாட்ஸ் அணியானது வநிந்து ஹசரங்கா, மைக்கைல் லூயிஸ் ஆகியொரது பொறுப்பான ஆட்டத்தின் முலம் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை சேர்த்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 07, 2024 • 12:28 PM

இதில் அதிகபட்சமாக வநிந்து ஹசரங்கா 40 ரன்களையும், மைக்கைல் லூயிஸ் 30 ரன்களையும் சேர்த்தனர். ராயல்ஸ் அணி தரப்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளையும், தீக்‌ஷனா, ஒபெத் மெக்காய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய பார்படாஸ் ராயல்ஸ் அணியிலும் வீரர்கள் அடுத்தடுத்து சீரான இடைவெளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். 

Trending

அதிலும், கதீம் 30 ரன்களுக்கும், துனித் வெல்லாலகே 39 ரன்களுக்கும் என விக்கெட்டை இழக்க, இறுதியில் நைம் யங் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் பார்படாஸ் ராயல்ஸ் அணியானது 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் பேட்ரியாட்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துனித் வெல்லாலகே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

 

Also Read: Funding To Save Test Cricket

இந்நிலையில் இப்போடியில் கடைசி ஓவரில் ராயல்ஸ் அணி வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரில் ஜேசன் ஹோல்டர், மஹீஷ் தீக்ஷனா ஆகியோர் விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்தந் இலையில், களத்தில் இருந்த நைம் யங் சிக்ஸர் விளாசி வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இந்நிலையில் நைம் யங் சிக்ஸர் விளாசிய காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement