SA vs IND: அடுத்தடுத்து விக்கெட்டுகளினால் சாதனைப் படைத்த ஒலிவியர்!
குறைந்த பந்துகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த 2ஆவது வீரர் என்கிற பெருமையை தென் ஆப்பிரிக்காவின் ஒலிவியர் பெற்றுள்ளார்.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்று டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. 2ஆவது டெஸ்ட் இன்று தொடங்கியுள்ளது.
ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெறும் டெஸ்டில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. காயம் காரணமாக இந்த டெஸ்டிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார். இதனால் கேஎல் ராகுல் கேப்டனாகக் களம் இறங்கியுள்ளார். டாஸ் வென்ற ராகுல், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
Trending
இந்திய அணியில் கோலிக்குப் பதிலாக ஹனுமா விஹாரி தேர்வாகியுள்ளார். தென் ஆப்பிரிக்க அணியில் ஓய்வு பெற்ற டி காக்குக்குப் பதிலாக கைல் வெர்ரைனும், முல்டருக்குப் பதிலாக ஒலிவியரும் தேர்வாகியுள்ளார்கள்.
இப்போட்டியின் முதல் நாளில் ஒலிவியரின் அடுத்தடுத்த பந்துகளில் புஜாராவும் ரஹானேவும் ஆட்டமிழந்தார்கள். இதையடுத்து 11ஆவது டெஸ்டில் 50 விக்கெட்டுகளைப் பூர்த்தி செய்துள்ளார் ஒலிவியர்.
குறைந்த டெஸ்டுகளில் விரைவாக 50 விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் டர்னர் முதலிடத்தில் உள்ளார். 1888இல் 6ஆவது டெஸ்டிலேயே இந்த இலக்கை அவர் அடைந்தார். தென் ஆப்பிரிக்காவின் வெர்னான் பிலாண்டர் 7 டெஸ்டுகளில் 50 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
First Oliver gets Pujara
— Kartik Tripathi (@ImKartik05) January 3, 2022
Then gets Rahane on duck
Then the amazing ball
India is in trouble#INDvsSA pic.twitter.com/AAiavknNEl
குறைந்த பந்துகளில் விரைவாக 50 விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் வெர்னான் பிலாண்டர் முதலிடத்தில் உள்ளார். 1240 பந்துகளில் அவர் இச்சாதனையைச் செய்தார். 2ஆவது இடத்தை 29 வயது டுவைன் ஒலிவியர் பெற்றுள்ளார். அவரை 1486 பந்துகளில் 50 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்..
குறைந்த பந்துகளில் 50 டெஸ்ட் விக்கெட்டுகள்
- 1240 - வெர்னான் பிலாண்டர்
- 1486 - டுவைன் ஒலிவியர்
- 1512 - ஜானி பிரிக்ஸ்
Win Big, Make Your Cricket Tales Now