ஐபிஎல் 2022: தோனி செய்ததை மீண்டும் செய்த திவேத்தியா!
ஐபிஎல் வரலாற்றில் தோனி மட்டுமே செய்த சாதனையை குஜராத் அணியில் விளையாடும் ராகுல் திவேத்தியா படைத்து அசத்தியுள்ளார்.
ராகுல் திவேத்தியா என்ற பெயரை நாம் 2020 ஆண்டு முதல் தான் கேள்வி பட்டு இருப்போம். ஆனால் அவர் 2014ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
ராகுல் திவாட்டியா 2014ஆம் ஆண்டே ராஜஸ்தான் அணிக்காக விளையாடி இருக்கிறார். ஆனால் அப்போது அவருக்கு அங்கு ஒன்றும், இங்கு ஒன்றுமாக தான் விளையாட வாய்ப்பு கிடைத்தது. 2017ஆம் ஆண்டு பஞ்சாப், 2018ஆம் ஆண்டு டெல்லிக்கு விளையாடிய ராகுல் திவேத்தியா, அப்போது ஒரே இன்னிங்சில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பராக இல்லாத வீரர் என்ற பெருமையை படைத்தார்.
Trending
ராகுல் திவேத்தியா புகழ் உச்சிக்கு சென்று 2020ஆம் ஆண்டு சீசனில் தான். பஞ்சாப்க்கு எதிராக 224 ரன்கள் சேஸ் செய்யும் போது, திவாட்டியா ஒரே ஓவரில் 5 சிக்சர் விளாசி அணிக்கு வெற்றியை தேடி தந்தார். அந்த சீசனில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் கலக்கியதால் 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.
ஆனால் ராகுல் திவாட்டியா 2021ஆம் ஆண்டு சீசனில் சரிவர விளையாடவில்லை. இந்த நிலையில் மெகா ஏலத்தில் ராகுல் திவேத்தியாவை எடுக்க சிஎஸ்கே அணியும், குஜராத் அணியும் கடுமையாக போட்டி போட்டது. திவேத்தியாவுக்கு சிஎஸ்கே அணி 8.75 கோடி வரை ஏலத்தில் கேட்க, குஜராத் அணி 9 கோடிக்கு அவரை வாங்கியது. அப்போது ராகுல் திவேத்தியாவுக்கு இவ்வளவு ரூபாய் கொடுக்க சிஎஸ்கே முன்வந்ததற்கு ரசிகர்கள் கேலி கிண்டல் செய்தனர்.
ஆனால், 2 பந்துக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட போது கடைசியில் 2 சிக்சர் விளாசி அணிக்கு வெற்றியை தேடி தந்துள்ளார் ராகுல் திவேத்தியா. கடந்த 2016 ஆம் ஆண்டு புனே அணிக்காக தோனி விளையாடிய போது, பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அக்சர் பட்டேல் வீசிய ஓவரில் தோனி கடைசி 2 பந்தில் 2 சிக்சர் விளாசி சாதனை படைத்தார். தற்போது அதனை திவேத்தியாவும் செய்துள்ளதால் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.
Win Big, Make Your Cricket Tales Now