
WATCH: Rishabh Pant Mixes His 'One-Hand' Flick With Dhoni's 'Helicopter' (Image Source: Google)
டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் தனது திறமையை வெளிப்படுத்தி விட்டார். எனினும் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் அதே போல் கலக்க ரிஷப் பந்த் தவறி வந்தார்.
குறிப்பாக ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடும் ரிஷப் பந்த், இந்தியாவுக்காக சர்வதேச டி20 போட்டியில் தொடர்ந்து சொதப்பினார். அவர் இந்தியாவுக்காக டி20 போட்டியில் அரைசதம் விளாசி 3 ஆண்டுகள் ஆகிறது. 24 இன்னிங்சில் ஒரு முறை கூட அரைசதம் அடிக்கவில்லை.
டி20 உலககோப்பையில் இந்தியா பலமுறை தடுமாறிய போதும் ரிஷப் பந்த் பெரிய ரன்களை குவிக்கவில்லை. இது ரிஷப் பந்த் மீது ஒரு விமர்சனமாகவே வைக்கப்பட்டது. இதனை மாற்ற வேண்டும் என்ற உத்வேகத்துடன் இன்றைய போட்டியில் களத்துக்கு வந்த ரிஷப் பந்த், முதல் பந்திலேயே பவுண்டரியை அடித்து அனல் பறக்க வைத்தார்.