Advertisement

ஐபிஎல் 2022: வெங்கடேஷ் ஐயருக்கு செத் ரோலின்ஸின் ஸ்பெஷல் வாழ்த்து!

தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயருக்கு, WWE செத் ரோலின்ஸ் வாழ்த்துக்கூறி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

Advertisement
WATCH: Seth Rollins 'Blesses' KKR's Venkatesh Iyer To 'Grab The Cup' Ahead Of IPL 2022
WATCH: Seth Rollins 'Blesses' KKR's Venkatesh Iyer To 'Grab The Cup' Ahead Of IPL 2022 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 26, 2022 • 03:48 PM

ஐபிஎல் 15ஆவது சீசன் போட்டிகள் இன்று தொடங்குகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 26, 2022 • 03:48 PM

கடந்த சீசனின் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்விக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கொல்கத்தா அணி களமிறங்குகிறது.

Trending

கொல்கத்தா அணியின் வெற்றியை உறுதி செய்வதற்கு உதவக்கூடிய முக்கிய வீரராக வெங்கடேஷ் ஐயர் இருக்கிறார். கடந்த சீசனின் முதல் பாதியில் தத்தளித்து வந்த கொல்கத்தா அணியை, 2வது பாதியில் காப்பாற்றியவர் இவர் தான். ஓப்பனிங்கே அதிரடி, பவுலிங்கில் முக்கிய விக்கெட் என ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதனையடுத்து இந்த சீசனில் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் அவரை உற்சாகப்படுத்த WWE சூப்பர் ஸ்டார் செத் ரோலின்ஸ் சர்பரைஸ் கொடுத்துள்ளார். சமீபத்தில் நடந்த நேர்க்காணல் ஒன்றில் வெங்கடேஷ் ஐயர், தனக்கு WWE மல்யுத்தப்போட்டி மிகவும் பிடிக்கும் என்றும், அதில் செத் லாரன்ஸின் தீவிர ரசிகன் என்றும் தெரிவித்திருந்தார். இதனை அறிந்த செத் ரோலின்ஸ் வெங்கடேஷுக்காக ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

அதில், “வெங்கடேஷ் என் தோழா.. நீ எனது தீவிர ரசிகன் என்பது எனக்கு தெரியவந்தது. மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. உனக்கு ஐபிஎல் தொடர் எதிரே உள்ளது. என்னுடைய ஆசிர்வாதமும், ஊக்குவிப்பும் உனக்கு எப்போதும் உண்டு. சிறப்பாக விளையாடி கோப்பையை வென்று வா” என கூறியுள்ளார். இது தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
ஐபிஎல்-ல் உள்ள அதிர்ஷ்டம்

ஐபிஎல் தொடரில் வெங்கடேஷ் ஐயர் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 4 அரைசதங்களுடன் 370 ரன்களை குவித்துள்ளார். அவரின் சராசரி 41.11 ஆகும். ஐபிஎல் தொடர் மூலம் இந்திய அணியில் இடம்பிடித்த அவர் அடுத்த ஹர்திக் பாண்ட்யாவாக உருவாக்கப்பட்டு வருகிறார். எனவே இந்த சீசனிலும் நன்றாக விளையாடிவிட்டால், டி20 உலகக்கோப்பை அணியில் தவிர்க்க முடியாத இடத்தை பிடிப்பார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement