
Watch: Shikha Pandey's "Ball Of The Century" Sends Twitter Into A Frenzy (Image Source: Google)
ஆஸ்திரேலியா - இந்தியா மகளிர் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்களை மட்டுமே சேர்த்தது. பின் எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 19.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.
இந்நிலையில் இப்போட்டியின் போது முதல் ஓவரை வீசிய ஷிகா பாண்டே இரண்டாவது பந்திலேயே அலீசா ஹீலியை போல்டாக்கி வெளியேற்றினார். பந்து வைடாக செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நேராக ஸ்டம்பை பதம் பார்த்தது.