
WATCH: Siraj And Kuldeep Imitate The Umpire; 'Punished' With An Elbow To Guts (Image Source: Google)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் பொறுமையாக விளையாடிய இலங்கை அணி, கடைசி 5 ஓவரில் 80 ரன்களை விளாசினர். நிசாங்கா 53 பந்துகளில் 75 ரன்கள் விளாச, கேப்டன் சனாகா 19 பந்துகளில் 47 ரன்கள் விளாச, 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் ரசிகர்களை கவரும் நிறைய சுவாரஸ்ய விசயங்கள் நடைபெற்றது.
ஆட்டத்தின் 9.5வது ஓவரில் அசாரங்கா, சாஹல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனை ஹசரங்கா மறு ஆய்வு செய்த போது, அது அவுட் என உறுதி ஆனது. அப்போது களத்திற்குள் வந்த இன்றைய போட்டியில் விளையாடாத இந்திய வீரர்கள் நடுவர் பின்னால் நின்று அவுட் வழங்கினர்.