
ஷேன் வார்னே தனது அனைத்துக் கால சிறந்த பேட்டர்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கரை சேர்த்ததில்லை, இது கவாஸ்கருக்குள் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கலாம். மேலும் ஆஸ்திரேலியர்கள் மீது கவாஸ்கருக்கு எப்போதும் ஒரு கோபம் உண்டு, காரணம் அந்த அணி நடந்து கொள்ளும் விதம்தான்.
இந்நிலையில் ஷேன் வார்னே இறந்த பிறகு அவரது தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சித்தும், பவுலிங்கிலும் ஒன்றும் கிரேட் இல்லை என்றும் கவாஸ்கர் கூறியது இந்திய ரசிகர்களின் கண்டனங்களையே கிளப்பியது. இதோடு ஆஸ்திரேலிய ஊடகங்களும் கவாஸ்கர் விமர்சனத்தின் கால நேரம் பற்றி கண்டனங்களை எழுப்பியிருந்தன.
சுருக்கமாக 145 டெஸ்ட்களில் 708 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷேன் வார்னேவை கிரேட் பவுலர் இல்லை என்று கூறுவது அசட்டுத் தைரியமும், உலக கருத்துக்கு எதிராக ஒரு மல்லுக்கட்டு கருத்தை தெரிவிக்க வேண்டும் என்ற தேவையின் காரணமாகவும் இருக்கலாம்.