Advertisement

ஜடேஜா பாணியில் பேட்டை சுழற்றிய வார்னர்; வைரல் காணொளி!

சென்னை சூப்பர் கிங்ஸிற்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் ரவீந்திர ஜடேஜா பாணியின் பேட்டை சுழற்றிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Bharathi Kannan
By Bharathi Kannan May 20, 2023 • 18:55 PM
Watch - Warner doing sword celebration, Jadeja smiles!
Watch - Warner doing sword celebration, Jadeja smiles! (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் தொடரில் 67ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய சென்னை அணி அதிரடியாக விளையாடி 223 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் - பிரித்வி ஷா களமிறங்கினர். இரண்டாவது ஓவரிலேயே பிரித்வி ஷா ஆட்டமிழந்தார். அடுத்த வார்னருடன் சால்ட் ஜோடி சேர்ந்து விளையாடினர்.

Trending


இந்நிலையில் 5ஆவது ஓவரை தீபக் சாஹர் வீசினார். முதல் 2 பந்துகளை சிக்சர், பவுண்டரி விளாசிய வார்னர் 3ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். அப்போது 2ஆவது ரன்னுக்கு ஓடும் முயற்சியில் வார்னர் ஈடுபட்டார். அப்போது ரஹானே ஸ்டெம்பை அடித்தார். அது ஸ்டெம்பை அடிக்காமல் ஜடேஜாவிடம் சென்றது.

அப்போது மீண்டும் ரன் எடுக்கும் முயற்சியில் வார்னர் ஓட முயன்று ஆட்டம் காட்டினார். பதிலுக்கு ஜடேஜாவும் பந்தை ஸ்டெம்பை அடிப்பது போல போக்கு காட்டினார். இப்படி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காத நிலையில் வார்னர் ஜடேஜா ஸ்டைலில் பேட்டை சுழற்றினார். இதை பார்த்த ஜடேஜா சிரித்தப்படி அந்த இடத்தில் இருந்து விலகி சென்றார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement