
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் 202 ரன்களுக்கே ஆட்டமிழந்த இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை 229 ரன்களுக்கு சுருட்டியது.
இரண்டாவது நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் தென்னப்பிரிக்க அணி பெரும் ஸ்கோரை அடிக்கும் அளவிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியது. கேப்டன் டின் எல்கர் - கீகன் பீட்டர்சன் ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி தடுமாறி வந்தது. குறிப்பாக சீனியர் பவுலர்களான முகமது ஷமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்ட போதும் விக்கெட் விழவில்லை.
அப்போது தான் இந்திய அணிக்கு கைக்கொடுத்து காப்பாற்றினார் ஷர்துல் தாக்கூர். வந்த வேகத்தில் செட்டிலான பேட்ஸ்மேன்களை டீன் எல்கரை 28 ரன்களுக்கும், மறுமுணையில் இருந்த கீகன் பீட்டர்சனை 62 ரன்களுக்கும் வெளியேற்றி அசத்தினார். இதன் பின்னர் ஷர்துலின் ஆதிக்கம் தான் ஆட்டம் முழுவதும் இருந்தது. தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அவர், 2ஆவது இன்னிங்ஸில் மட்டும் 7 விக்கெட்களை சாய்த்து அசத்தினார்.