
Watch:Dewald Brevis smashes Rahul Chahar for four consecutive sixes as he takes 29 off the 9th over (Image Source: Google)
ஐபிஎல்-இன் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது.
199 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பைக்கு ரோஹித் சர்மா அதிரடி தொடக்கம் தந்தார். அவர் 17 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து இஷான் கிஷன் 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு, டெவால்ட் பிரேவிஸ் மற்றும் திலக் வர்மா பாட்னர்ஷிப் அமைத்தனர். 8 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 63 ரன்கள் எடுத்திருந்தது மும்பை. பிரேவிஸ் 16 பந்துகளில் 16 ரன்கள் எடுத்திருந்தார்.