Advertisement

WBBL: ரேச்சல் பிரீஸ்ட் சதத்தில் ஹரிகேன்ஸ் அபார வெற்றி!

மெல்போர்ன் ஸ்டார்ஸ் மகளிர் அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் மகளிர் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.

Bharathi Kannan
By Bharathi Kannan October 19, 2021 • 11:41 AM
WBBL: Hurricanes captain Priest hammers heavenly hundred
WBBL: Hurricanes captain Priest hammers heavenly hundred (Image Source: Google)
Advertisement

மகளிர் பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 6ஆவது லீக் ஆட்டத்தில் மொல்போர்ன் ஸ்டார்ஸ் அணி, ஹாபார்ட் ஹரிகேன்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற மொல்போர்ன் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

அதன்படி களமிறங்கிய ஹரிகேன்ஸ் அணியில் கேப்டன் ரேச்சல் பிரீஸ்ட் அதிரடியாக விளையாடி சதமடித்து அசத்தினார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 152 ரன்களைச் சேர்த்தது.

Trending


இதியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரேச்சல் பிரீஸ்ட் 68 பந்துகளில் 7 சிக்சர், 10 பவுண்டரிகள் என 107 ரன்களைக் குவித்தார். 

இதையடுத்து இலக்கை துரத்திய மொல்போர்ன் ஸ்டார்ஸ் அணி ஆரம்பம் முதலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிலும் அந்த அணியில் 6 பேர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழது ஏமாற்றமளித்தனார்.

இதனால் 19.2 ஓவர்களிலேயே அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களை மட்டுமே எடுத்தது. ஹரிகேன்ஸ் அணி தரப்பில் ரூத் ஜான்ஸ்டன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதன்மூலம் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement